பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில், பெங்களூரைச் சேர்ந்த SHG டெக்னாலஜிஸ் நிறுவனமும், விஷன்-எய்ட் அமைப்பும் இணைந்து உருவாக்கிய ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள் (Smart Vision Glasses ) என்ற புரட்சிகர தொழில்நுட்ப கருவி வழங்கும் நிகழ்வு, சென்னை VHS மருத்துவமனையில் 10.06.2025 செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது. ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் மூலமாக, அண்ணா நூற்றாண்டு நூலக பார்வை மாற்றுத்திறன் கொண்ட நூற்கட்டுநர்களுக்கு இந்த அதிநவீன கண்ணாடிகள் வழங்கப்பட்டன. இக்கருவிகளை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் முதன்மை நூலகர் மற்றும் தகவல் அலுவலர் அவர்கள், பிரெய்லி பிரிவின் பயனாளிகள், நூற்கட்டுநர்கள் ஆகியோர் பயன்படுத்தும் விதமாக பிரெய்லி பிரிவு நூலகர்களிடம் ஒப்படைத்தார்.
ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள்: ஒரு புதிய அனுபவம்
இந்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் இயங்கும் ஸ்மார்ட் விஷன் கண்ணாடிகள், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சுற்றுப்புறத்தை அறிந்து, பொருட்களை, நபர்களை அடையாளம் கண்டு, எழுத்துகளைப் படித்து, வழிகாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்குகின்றன. இந்தக் கண்ணாடிகள் பயனர்கள் தனித்து இயங்கவும் அன்றாட செயல்பாடுகளை எளிமையாக்கவும் உதவுகின்றன.
5:28 AM
Tags :
Activities
,
Programme
Subscribe by Email
Follow Updates Articles from This Blog via Email
No Comments